சென்னை: இயக்குனர் மிஷ்கின் – கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம் பற்றி அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் வழங்குகின்றன. தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குனரான மிஸ்கின் இணைந்து நடிக்கும் புதிய படத்தை பிரவீன் எஸ் விஜய் இயக்கவுள்ளார். தலைப்பு இன்னும் அறிவிக்கப்படாத இந்த படம், Intense Courtroom Drama -ஆக கதைக்களம் இருக்கும் என தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை அரு.வின்சென்ட், எடிட்டிங்: பிரசன்னா ஜி.கே, கலை இயக்கம்: குழித்துறை ரவீஸ் மேற்கொள்கின்றனர்.
இந்த படத்தை வேடிக்காரன்பட்டி எஸ் சக்திவேல் மற்றும் உமேஷ் குமார் பன்சல் தயாரிக்க, அக்ஷய் கேஜ்ரிவால் மற்றும் விவேக் சந்தர் எம் இணை தயாரிப்பாளர்களாக உள்ளனர். வினோத் சி.ஜே படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசராக பணியாற்ற, ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் வழங்குகின்றன.
கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் வெளியான தெலுங்கு படம் உப்பு கப்புரம்புவில் நடித்தார். அடுத்ததாக, அவர் நடிப்பில் உருவாகியுள்ள ரிவால்வர் ரீட்டா வெளியீட்டை எதிர்பார்த்து காத்திருக்கிறது.
மிஸ்கின் அண்மையில் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய டிராகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன்பின் ஓ எந்தன் பேபியில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றிய அவர், தற்போது துல்கர் சல்மான் நடிக்கும் 40வது படத்தில் நடித்து வருகிறார். அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 தாமதமாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.