சென்னை: கேம்சேஞ்சர் படத்திற்காக இயக்குனர் ஷங்கர் ரூ. 50 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ஷங்கர். இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த இந்தியன் 2, எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
ஷங்கர் இயக்கியுள்ள கேம் சேஞ்சர் படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகிறது. இப்படத்தை எதிர்பார்த்து ஆவலுடன் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். ராம் சரண், கியாரா அத்வானி இணைந்து நடித்துள்ள இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்துள்ளார்.
இந்நிலையில், கேம் சேஞ்சர் படத்தை இயக்குவதற்காக இயக்குனர் ஷங்கர் வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்காக இயக்குனர் ஷங்கர் ரூ. 50 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என சொல்லப்படுகிறது. இந்தியன் 2 படத்தை இயக்கவும் ரூ. 50 கோடி தான் ஷங்கர் சம்பளமாக வாங்கி இருந்தார் என தகவல் தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.