சென்னை : நடிகர் அதர்வா நடிப்பில் வெளியாகி உள்ளார் டிஎன்ஏ படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில் பட குழுவினரை இயக்குனர் சுதா கொங்கரா பாராட்டியுள்ளார்.
அதர்வா நடிப்பில் வெளியான திரைப்படம் டிஎன்ஏ. இப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.இப்படத்தை ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா போன்ற திரைப்படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். டிஎன்ஏ திரைப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
படத்தின் திரைக்கதை தொடக்கம் முதல் இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாக செல்வது படத்தின் பலமாக அமைந்துள்ளது. அதர்வா கடைசியாக நடித்து வெளியான நிறங்கள் மூன்று திரைப்படம் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
ஆனால் டிஎன்ஏ திரைப்படத்தின் மூலம் ஒரு கம்பேக் கொடுத்துள்ளார். மேலும், படத்தின் முன்பதிவுகள் மற்றும் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இந்நிலையில், டிஎன்ஏ படத்தை பார்த்த இயக்குனர் சுதா கொங்கரா தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.