சென்னை: பாலிவுட் நடிகை திஷா பதானி, தமிழில் சூர்யாவின் கங்குவா படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால் ஹிந்தியில் எம்.எஸ். தோனி படத்தின் மூலம் நல்ல வரவேற்பைப் பெற்றார். அதன் பின் பாகி 2, பாரத், மலங், ராதே உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்தார்.

சமீபத்தில் திஷா பதானி வெளியிட்ட ஒரு வீடியோவை பார்த்த இணையவாசிகள், அவர் விலா எலும்புகளை அகற்றும் அறுவை சிகிச்சை (Rib Removal Surgery) செய்ததாக கூறத் தொடங்கினர். இந்த சிகிச்சையில் 11 மற்றும் 12வது விலா எலும்புகள் அகற்றப்படுவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் இடுப்பு மெலிந்து, மார்பு பகுதி பெரியதாக தோன்றும்.
ஆனால் மருத்துவர்கள் இந்த சிகிச்சை மிகவும் ஆபத்தானது என்றும், சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கின்றனர். மேலும், பெரும்பாலான மருத்துவர்கள் இதை பரிந்துரைக்கவில்லை. இதற்கான செலவு ₹10 லட்சம் முதல் ₹20 லட்சம் வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
பலரும், திஷா பதானி உண்மையில் அறுவை சிகிச்சை செய்யவில்லை, மாறாக filters மற்றும் editing காரணமாக உடலமைப்பில் மாறுபாடு தெரிகிறது எனக் கூறுகின்றனர்.
இந்த வதந்திகள் குறித்து திஷா எந்த விளக்கமும் அளிக்காமல் அமைதியாக இருக்கிறார். அவர் தற்போதும் பாலிவுட் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.