மும்பை: படிப்பில் ஆர்வம் இல்லாமல் நடிப்பைத் தேர்ந்தெடுத்து வெற்றியடைந்தவர்கள் பட்டியலில் நடிகை திஷா பதானியும் இடம்பெறுகிறார். தமிழில் ‘கங்குவா’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பரேலி, உத்தரப்பிரதேசத்தில் 1992ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி பிறந்த திஷா, தற்போது பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என பான் இந்திய நடிகையாக வலம் வருகிறார்.

ஆரம்பத்தில் கல்லூரி படிப்பை விட்டுத் துறந்த திஷா, பின்னர் மாடலிங் வழியாக திரைத்துறைக்கு நுழைந்தார். 2015ல் தெலுங்கில் அறிமுகமாகி, 2016ல் தோனி வாழ்க்கை வரலாறு திரைப்படம் மூலம் பாலிவுட்டில் பிரபலமானார். தனது பிரமாண்ட ரசிகர் வட்டத்தையும், மெகா பட வாய்ப்புகளையும் பெற்றுக்கொண்ட இவர், தற்போது பல விளம்பரங்களின் முகமாகவும் செயல்படுகிறார்.
இவர் ஒரு படத்திற்கு 5-7 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். 2023ம் ஆண்டு வரை 75 கோடி ரூபாய்க்கு மேலான சொத்துகளை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. தற்போது அவரது சொத்து மதிப்பு 85 கோடி முதல் 100 கோடி வரை என கூறப்படுகிறது. Kelvin Klein போன்ற பிரபல நிறுவனங்களுக்கு விளம்பரதூதராகவும் பணியாற்றுகிறார். சூர்யாவுடன் நடித்த கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றிபெறவில்லை என்றாலும், பிரபாஸின் ‘கல்கி’ திரைப்படம் மூலம் மீண்டும் உயர்ந்தார்.
ரசிகர்கள் அவரை இன்ஸ்டாகிராமிலும் பெரிதும் பின்தொடர்கிறார்கள். டைகர் ஷெராஃப்புடன் அவரது காதல் வாழ்கையும் அடிக்கடி பேச்சாயிருப்பது வழக்கம். தற்போது ‘வெல்கம் டு தி ஜங்கிள்’ மற்றும் ‘ஹோலிகார்ட்ஸ்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தனது சொந்த முயற்சியால் கோடி கோடி சொத்துகளைக் குவித்த இவர், கல்வியைத் துறந்தபின்பும் கடின உழைப்பின் மூலம் முன்னேற முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.