பாலிவுட் நடிகையாக பிரபலமான திஷா பதானி, ‘தோனி’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவர். அதன்பின்னர், முன்னணி ஹீரோக்கள் ஜோடியாக பல முக்கியமான படங்களில் நடித்த அவர், தற்போது தமிழ் சினிமாவில் சூர்யாவின் “கங்குவா” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இயற்கையோடு ஒட்டிய ஒல்லி தோற்றத்தை பராமரிக்க தினமும் மணிநேரம் ஜிம்மில் செலவழிக்கும் திஷா, சமீபத்தில் பிகினி உடையில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் அந்த புகைப்படங்களை அவர் விரைவாகவே நீக்கிவிட்டார்.
தற்போது, வித்தியாசமான கிளாமர் உடையில் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ள திஷா, மீண்டும் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.