சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் புரமோஷன் கேரளாவில் நடைபெற்றது. விழாவில் பேசிய சூர்யா, “நான் ‘ரெட்ரோ’ படத்தைப் பார்த்திருக்கிறேன், உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன், இது முந்தைய 45 படங்களில் இருந்து கண்டிப்பாக வித்தியாசமாக இருக்கும். உங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கும் இந்த அன்பிற்காக, உங்களை மகிழ்விக்கும் வித்தியாசமான படங்களை நிச்சயம் தயாரிப்பேன்.

இரண்டரை மணி நேரம் நீங்கள் தியேட்டருக்கு வந்தால் உங்களை மகிழ்விக்க நான் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வேன்” என்று சூர்யா கூறினார். அதன்பிறகு, தனது பேச்சை முடிக்கும் முன், “இந்தப் படத்தின் காட்சிக்காகத்தான் நான் சிகரெட் புகைத்தேன். தயவு செய்து நிஜ வாழ்க்கையில் சிகரெட் பிடிக்காதீர்கள். ஒரே ஒரு இழுபறியில் ஆரம்பித்தால் உங்களால் கைவிட முடியாது. அந்த செயலை நான் ஆதரிக்க மாட்டேன்.