சென்னை: ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி பாலிவுட்டில் வெளியான அந்தாதுன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக மாறியது. விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் படத்தை விட அந்த ஆண்டு பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா, தபு மற்றும் ராதிகா ஆப்தே நடித்த அந்தத் திரைப்படம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியது.
2021 ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ரவி கே. சந்திரன் இயக்கத்தில் பிரித்திவிராஜ், ராஷி கன்னா மற்றும் மம்தா மோகன்தாஸ் நடிப்பில் வெளியான பிரம்மம் திரைப்படம் அந்தாதுன் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் பிரம்மம் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. அந்தாதுன் படத்தின் ரைட்ஸை கைப்பற்றிய தியாகராஜன் தனது மகன் பிரசாந்த்தை வைத்து இயக்கியுள்ள படம்தான் அந்தகன். டாப் ஸ்டார் பிரசாந்தின் அந்தகன்: ஆரம்பத்தில் மோகன் ராஜா இந்த படத்தை இயக்குவதாக இருந்தது.
அதன் பின்னர் பொன் மகள் வந்தாள் படத்தின் இயக்குநர் கமிட்டானார். அதன் பின்னர் அவரும் விலகிய நிலையில், கடைசியில், அந்தகன் படத்தை தானே இயக்க முன் வந்தார் தியாகராஜன். தனது மகன் படத்துக்கு பெஸ்ட்டா எல்லாம் இருக்க வேண்டும் என பார்த்து பார்த்து படத்தை இயக்கியுள்ளதாக கூறியுள்ளார். அந்தகன் டீம்: பிரசாந்துக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். இந்தியில் தபு நடித்த வில்லி கதாபாத்திரத்தில் சிம்ரன் நடித்துள்ளார். மேலும், நவரச நாயகன் கார்த்திக், சமுத்திரகனி, வனிதா விஜயகுமார், கே.எஸ். ரவிக்குமார், ஊர்வசி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
பாடலை வெளியிட்ட விஜய்: சந்தோஷ் நாராயணன் இசையில் அந்தகன் படத்தின் பாடல்கள் உருவாகி உள்ளன. ஆனால், நேற்று நடைபெற்ற அந்தகன் ஆந்தம் வெளியீட்டு விழாவுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனையே படக்குழு அழைக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவரும் படத்தின் பாடல்கள் குறித்து சர்ச்சைக்குரிய ட்வீட் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அந்தகன் ஆந்தம் பாடலை கோட் படத்தில் தன்னுடன் நடித்து வரும் பிரசாந்துக்காக விஜய் வெளியிட்டு இருந்தார்.
பிரசாந்த் சம்பளம் என்ன தெரியுமா?: அந்தகன் படமே சொந்த தயாரிப்பு தான். இந்நிலையில், அந்தகன் படத்தில் அனைவருக்கும் அப்பா தியாகாரஜன் பணம் கொடுத்து விட்டார் என்று சொன்னார். நடிகை ஊர்வசி அதிகமாக கொடுத்த பணத்தையும் ரிட்டர்ன் செய்து விட்டதாகக் கூறினார். உங்களுடைய சம்பளம் உங்களுக்கு கிடைத்ததா? என பிரசாந்திடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப, இந்த படமே என் சம்பளம் தான் என்றார் பிரசாந்த். கோட் பட சம்பளம்: வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தில் நடிகர் பிரசாந்துக்கு 7 முதல் 8 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்தகன் படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகிறது. விரைவில் தனது அடுத்த படத்தையும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார் பிரசாந்த் என்பது குறிப்பிடத்தக்கது. சீக்கிரமே படத்தின் இயக்குநர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கின்றனர்.