பாலிவுட் நடிகையும் லோக்சபா எம்பியுமான கங்கனா ரனாவத் தயாரித்து இயக்கிய படம் ‘எமர்ஜென்சி’. 1975-1977-க்கு இடையில் 21 மாதங்களுக்கு இந்தியாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தல்களை காரணம் காட்டி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். காங்கிரஸ் கட்சியின் இந்த செயலை இந்தியாவின் இருண்ட காலம் என்று எதிர்க்கட்சிகள் இன்னும் விமர்சித்து வருகின்றன.
இந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ‘எமர்ஜென்சி’. இதில் இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடிக்கிறார். சீக்கிய அமைப்புகளின் கடும் எதிர்ப்பு மற்றும் தணிக்கை விவகாரங்களால் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு ஜனவரி 17-ம் தேதி திரையரங்குகளில் படம் வெளியானது. சுமார் ரூ.60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ‘எமர்ஜென்சி’ திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே இந்திய அளவில் ரூ.2.5 கோடி வசூலித்தது. அதே சமயம் இரண்டாம் நாளே சற்று ஏற்றம் அடைய ஆரம்பித்து சுமார் 4 கோடி வரை வசூலித்ததாக வர்த்தக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மொத்தத்தில் முதல் இரண்டு நாட்களில் ரூ.6 கோடியைத் தாண்டியுள்ளது. கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், முதல் நாளை விட இரண்டாம் நாள் வசூல் அதிகமாக இருந்ததால், அடுத்தடுத்த நாட்களில் வசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பட வியாபாரிகள் கணித்துள்ளனர். சமீப காலமாக பாலிவுட்டில் ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வரும் கங்கனாவுக்கு ‘எமர்ஜென்சி’ ரிலீஃப் படமாக இருக்கும் என்றும் படக்குழு நம்புகிறது. இதற்கிடையில், இந்திரா காந்தி குறித்து கங்கனா ரனாவத் கூறியது: இந்தப் படத்துக்காக இந்திரா காந்தி குறித்து விரிவான ஆராய்ச்சி செய்தேன். அப்போது நான் அறிந்தது முற்றிலும் முரண்பட்டது.
அவள் பலவீனமாக இருந்தால், நாங்கள் இன்னும் கட்டுப்பாடுகளை விரும்புவோம் என்ற எனது நம்பிக்கையை இது வலுப்படுத்தியது. இந்திரா காந்தி மிகவும் சக்திவாய்ந்த பிரதமர் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவள் பலவீனமாக இருந்தாள். அவள் தன்னைப் பற்றி உறுதியாக தெரியவில்லை. இந்திரா காந்தி பலரை நம்பியிருந்தார். அவர்களில் ஒருவர் சஞ்சய் காந்தி. எமர்ஜென்சி படத்துக்கு முன்பு எனக்கு இந்திரா காந்தி மீது அவ்வளவு அனுதாபம் இல்லை. எமர்ஜென்சி திரைப்படம் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதற்காக நான் பல சவால்களையும், பின்னடைவுகளையும், அழுத்தங்களையும் சந்தித்தேன்.
படத்தில் சொல்லப்பட்ட விஷயங்களுக்கு ஆதாரங்களை தாக்கல் செய்தோம். படத்தில் எதிர்க்க எதுவும் இல்லை. இப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திரைப்பட வாரியத்தின் அனுமதி கிடைக்காததால் வெளியிட முடியவில்லை. படம் வெளியாவதைத் தடுக்க பலரும் முயன்றனர். இது என்னை முற்றிலும் சிதைத்தது. எமர்ஜென்சி திரைப்படம் வழக்கத்திற்கு மாறான மற்றும் சர்ச்சைக்குரிய படம்.
ஆனால் இந்த படம் வரலாற்றின் ஒரு முக்கிய பகுதியை பற்றி பேசுகிறது. இந்திரா காந்தி அனைவராலும் விரும்பப்படும் தலைவர். “எமர்ஜென்சி காலத்தில் நடந்த விரும்பத்தகாத சம்பவங்களைத் தவிர, இந்திரா காந்தி அனைவராலும் விரும்பப்பட்டு கொண்டாடப்பட்டார். அவர் மூன்று முறை பெண் பிரதமராக நாட்டை வழிநடத்தினார். இது சாதாரண விஷயம் அல்ல” என்று கங்கனா ரனாவத் கூறியிருந்தார்.