கேரளா: சலார் 2′ எப்போது தொடங்கும்? என்று நடிகரும், இயக்குனருமான பிருத்விராஜ் பதில் அளித்துள்ளார்.
’சலார்’ படத்தைத் தொடர்ந்து, அதன் அடுத்த பாகம் எப்போது என்ற கேள்வி அப்படம் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் கேட்கப்பட்டு வருகிறது. தற்போது ‘எம்புரான்’ படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வில் பிருத்விராஜிடம் ‘சலார் 2’ எப்போது என்ற கேள்விக்கு கேட்கப்பட்டது.
அதற்கு பிருத்விராஜ், “பிரசாந்த் நீல் தற்போது ஜூனியர் என்.டி.ஆர் படத்தில் மும்முரமாக இருக்கிறார். நானும் அடுத்டுத்த படங்களில் மும்முரமாக இருக்கிறேன். பிரபாஸும் ‘ஸ்பிரிட்’ படத்தினை தொடங்கவுள்ளார். மூவருமே அவரவர் படங்களை முடித்தவுடன் ‘சலார் 2’ தொடங்கும்” என்று தெரிவித்துள்ளார். இந்தப் பதிலின் மூலம் ‘சலார் 2’ தொடங்க இன்னும் ஆண்டுகள் ஆகும் என்பது தெரிகிறது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சலார்’. ஹோம்பளே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.