எஸ்குயர் பத்திரிகை வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில், ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் 1.49 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் தி ராக் டுவைன் ஜான்சன் 1.19 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் இரண்டாவது இடத்திலும், டாம் குரூஸ் 891 மில்லியன் டாலர் நிகர மதிப்புடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

ஷாருக்கான் 876.5 மில்லியன் டாலர் நிகர மதிப்புடன் நான்காவது இடத்திலும், ஜார்ஜ் குளூனி 742.8 மில்லியன் டாலர் நிகர மதிப்புடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். 2025-ம் ஆண்டின் முதல் 10 பணக்கார நடிகர்களின் பட்டியலில் ராபர்ட் டி நீரோ, ஜாக் நிக்கல்சன் மற்றும் ஜாக்கி சான் போன்ற பிற ஜாம்பவான்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் மட்டுமே இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அவரது ‘பதான்’ மற்றும் ‘ஜவான்’ ஆகிய இரண்டு படங்களும் ஒரே ஆண்டில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. ஷாருக்கான் அடுத்து சுஜோய் கோஷ் இயக்கும் ‘கிங்’ படத்தில் நடிக்கிறார்.