ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘பிரதர்’ படம் பெரும் தோல்வியை தழுவியது. படத்தை வாங்கிய அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் நஷ்டம் ஏற்படும் என வர்த்தக நிபுணர்கள் கருதுகின்றனர். இந்நிலையில், ஜெயம் ரவி தனது அடுத்த படத்தின் வெளியீட்டுக்கு தயாராகிவிட்டார். கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காதலிக்க நேரமில்லை’.
ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதற்கான இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை டிசம்பர் 20-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
அதன் புரொமோஷன் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.