சென்னை: 1987-ல் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘நாயகன்’. 37 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் ‘தக் லைஃப்’ படத்தின் மூலம் அறிமுகமாகிறார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து ஆர்.மகேந்திரன் மற்றும் சிவா ஆனந்த் தயாரித்துள்ளனர்.

இதனை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஜூன் 5-ம் தேதி வெளியாகும் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி படம் திரைக்கு வர இன்னும் 75 நாட்கள் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. சிம்பு, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.