சிவகார்த்திகேயனின் வளர்ச்சி தமிழ் சினிமாவில் பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. சில படங்கள் மட்டுமே இருப்பார்; பிறகு காணாமல் போய்விடுவார் என்று பலரும் ஆரூடம் கூறினார்கள். ஆனால் ஆரூடம் கூறியவர்களை ஆஃப் செய்யும் விதமாக தன்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டு படத்துக்கு படம் உச்சம் சென்றார். அதன் காரணமாக இப்போது கோலிவுட்டின் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். நடிப்பு மட்டுமின்றி பாடல்கள் எழுதுவது, பாடுவது என்று வேறு ஜானரிலும் பிஸியாக இருக்கிறார்.
சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்த நான்கு படங்களில் பிரின்ஸ் படம் மட்டும் தோல்வியை சந்தித்தது. அதற்கு பிறகு அவர் நடித்த மாவீரன், அயலான் ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். அயலான் திரைப்படம் லேட்டாக ரிலீஸானாலும்சிவாவுக்கு வெற்றியை கொடுத்தது. முக்கியமாக தனுஷின் கேப்டன் மில்லர் படத்துக்கு போட்டியாக களமிறங்கி அயலான் பந்தயம் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சிவாவின் மவுசு மேலும் உயர்ந்தது.
அமரன்: மாவீரன், அயலான் என இரண்டு படங்கள் தொடர்ச்சியாக ஹிட்டடித்ததை அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் எஸ்கே. ராஜ்குமார் பெரியசாமி இயக்க; கமல் ஹாசன் தயாரித்திருக்கிறார். சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். கண்டிப்பாக இந்தப் படமும் தனது கரியரில் மைல் கல்லாக இருக்கும் என்ற உச்சக்கட்ட நம்பிக்கையில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். ராஜ்குமார் பெரியசாமி இயக்குநர் என்பதால் கூடுதல் கவனத்தையும் படம் பெற்றுள்ளது.
உண்மை சம்பவம்: இந்தப் படமானது முன்னாள் இந்திய இராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. முதன்முறையாக இராணுவ வீரர் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார் சிவா. இந்தப் படத்தின்போதே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகி நடித்தும் முடித்திருக்கிறார். படமானது அக்டோபர் மாதம் ரிலீஸாகிறது. அடுத்த படம்: அடுத்தது சிபி சக்கரவர்த்தியுடன் ஒரு படம், வெங்கட் பிரபுவுடன் ஒரு படம் என பிஸி லைன் அப் இருக்கிறது. இந்நிலையில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவா நடிக்கும் படம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி அந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தாயாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.