காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் துருக்கி மற்றும் அஜர்பைஜான் பாகிஸ்தானை ஆதரித்தன. இதைத் தொடர்ந்து, இந்தியர்கள் அந்த நாடுகளுக்கு எதிராக சமூக ஊடகங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தியர்கள் அந்த நாடுகளில் படப்பிடிப்பு நடத்துவதை நிறுத்துமாறு திரைப்படத் துறையை வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக, அகில இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் சுரேஷ் ஷியாம் லால் குப்தா கூறுகையில், “இந்திய திரைப்படங்களை துருக்கியிலோ அல்லது அஜர்பைஜானிலோ படமாக்க வேண்டாம் என்று நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம். அந்த நாடுகளைச் சேர்ந்த யாராவது இந்திய சினிமாவில் பணிபுரிந்தால், அவர்களின் விசாக்களை ரத்து செய்ய வேண்டும்.

இந்த விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கும் கடிதம் எழுத உள்ளோம்,” என்று அவர் கூறினார். பெரும்பாலான இந்தி படங்கள் துருக்கி மற்றும் அஜர்பைஜானில் படமாக்கப்பட்டுள்ளன. அஜித்தின் தமிழ் திரைப்படமான ‘விடாமுயற்சி’ அஜர்பைஜானில் படமாக்கப்பட்டது.