சென்னை: சிகரெட் பிடிப்பதை நிறுத்துங்கள் ஷங்கர் என்று அட்வைஸ் செய்தார் நடிகர் அஜித் என்று நடிகர் ரோபோ ஷங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
அஜித்துடன் இணைந்து நடித்த பலரும் அவரை பற்றி புகழ்ந்து பேசியிருப்பதை நாம் பார்த்து இருக்கிறோம். அந்த வகையில் நடிகர் ரோபோ ஷங்கர், அஜித்துடன் இணைந்து நடித்தபோது நடந்த சம்பவம் ஒன்றை நினைவு கூர்ந்து பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
ஒரு முறை என்னிடம் தம் அடிக்க போறீங்களா என அஜித் கேட்டார். ஆம் என்றேன், அதற்கு அவர் அந்த தம்-ஐ என்னிடம் கொஞ்சம் குடுங்க என கேட்டார். அப்போது அவருடன் இருந்த உதவியாளர் ஒருவர், ‘சார் மேடமுக்கு தெரிஞ்சா பிரச்சனை ஆகிடும், நீங்க இத நிறுத்தி 8 வருடங்கள் ஆகிவிட்டது’ என கூறினார்.
அதற்கு அஜித் சார் ‘அடிக்கலங்க அத கொண்டு வாங்க’ என சொன்னார். அந்த தம்-ஐ என்னிடம் இருந்து வாங்கி பார்த்துக் கொண்டே இருந்தார். ‘எப்படியெல்லாம் சிகரெட் பிடித்துக் கொண்டு இருந்தேன் தெரியுமா’ என அஜித் கூறினார்”.
அந்த சிகரெட்டை அப்படியே அவரிடம் இருந்து வாங்கி, அதனை பத்திரமாக வைத்திருக்கிறேன். அதன்பின் தான் அஜித் சார் சொன்னார், நான் சிகரெட் பிடிப்பதை நிறுத்தி 8 வருடங்கள் ஆகிவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக நீங்களும் இதை விட்டுவிடுங்கள் ஷங்கர்” என அஜித் கூறியதாக ரோபோ ஷங்கர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.