சென்னை: நடிகர் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்த டிராகன் திரைப்படம் இதுவரை ரூ.134 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை ஆடியுள்ளது.
இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கவுதம் மேனன், மிஸ்கின் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மேலும் Youtube மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த விஜே சித்து மற்றும் ஹர்ஷத் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிக்க வைத்தனர்.
மக்களிடையே அமோக வரவேற்பை பெற்ற டிராகன் திரைப்படம் உலகளவில் 10 நாட்களில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினார்கள். அந்த வீடியோ கூட வெளிவந்திருந்தது.
இந்த நிலையில், 16 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள இப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, டிராகன் படம் உலகளவில் இதுவரை ரூ. 134 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.