சென்னையில் பிக்பாஸ் அபிராமி, திராவிட வெற்றிக் கழகம் என ஒரு போஸ்டர் வெளியிட்டதற்குப் பிறகு ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். விஜய் தனது கட்சிக்கு தமிழ்நாடு வெற்றிக் கழகம் என்ற பெயர் வைத்துள்ள நிலையில், அபிராமி “திராவிட வெற்றிக் கழகம்” என குறிப்பிட்டதனால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இது அரசியல் அறிவிப்பா அல்லது படத்தின் விளம்பரமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

அபிராமி, 2017ஆம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு பட்டம் பெற்றவர். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே புகழ் பெற்ற இவர், யூடியூப் சீரிஸ் “Ctrl Alt Del” மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். பின்னர் “NOTA”, “களவு”, “நேர்கொண்ட பார்வை” உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். டான்ஸ் ஜோடி டான்ஸ், பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் “நினைத்தேன் வந்தாய்” என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அபிராமி தனது இன்ஸ்டா பக்கத்தில் பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு “திராவிட வெற்றிக் கழகம்” என தலைப்பிட்டு போஸ்டர் வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக, இவரும் அரசியலில் வருகிறார் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், இயக்குநர்-நடிகர் ஆர். பார்த்திபனும் சமீபத்தில் “நான் தான் சிஎம்” என்ற அரசியல் திரைப்படத்தை அறிவித்து, சிங்காரவேலன் என்ற முதல்வர் வேட்பாளர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனால், அபிராமியும் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வாரா அல்லது அவருடைய போஸ்டர், பட விளம்பரத்திற்கானதா என்பதில் ரசிகர்கள் மற்றும் ரசிகைகள் குழப்பத்தில் உள்ளனர். அடுத்த சில நாட்களில் முழு விவரம் வெளியாகும் வரை இந்த சர்ச்சை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.