பத்து தல படத்திற்கு பிறகு தேசிங் பெரியசாமி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில், படத்தின் நீளத்திற்கு படத்தை மாற்ற சிம்பு முடிவு செய்துள்ளார்.
ஆனால் எப்போதைக்கு படம் தொடங்கும் என்று தெரியவில்லை. இதனால் கமல்ஹாசனின் டாக்லைஃப் படத்தில் நடிக்க சென்றார் சிம்பு. இந்நிலையில், இந்த படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் தேசிங் பெரியசாமி படத்தை கமல்ஹாசன் கைவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து சிம்புவிடம் பேசிய அவர், எதிர்காலத்தில் வேறு ஒரு படத்தில் இணைவதாகவும் கூறியுள்ளார். இந்தப் படத்துக்குக் கொடுத்த அட்வான்ஸ் டாக்லைஃப் படத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சிம்பு தற்போது தனது அடுத்த பட வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். டைனோசர்கள் படத்தை இயக்கிய எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இவரின் கதையை கேட்டு சம்மதித்த சிம்பு அவரை வேல்ஸ் இன்டர்நேஷனலுக்கு அனுப்பி வைத்தார். அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை தொடங்கும் நிலையில், 50 கோடி சம்பளம் கேட்டு குட்டையை குழப்புகிறார் சிம்பு. கடந்த சில வருடங்களில் சிம்புவின் ஒரே வெற்றி மாநாடு. ஆனால் மற்ற நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குவதை சுட்டிக்காட்டி தனக்கும் 50 கோடி கேட்கிறார்.