டாக்கா: இந்திய வரலாற்றில் மிகவும் கொந்தளிப்பான காலகட்டங்களில் ஒன்றான 1975-ம் ஆண்டு இந்திரா காந்தி அறிவித்த அவசரநிலை பற்றி ‘எமர்ஜென்சி’ திரைப்படம் பேசுகிறது. கங்கனா ரனாவத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அனுபம் கெர் மற்றும் ஷ்ரேயாஸ் தல்பாடே முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
‘எமர்ஜென்சி’ திரைப்படம் ஜனவரி 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த சூழ்நிலையில், வங்கதேச அரசு இந்தப் படத்தைத் தடை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான தற்போதைய பதற்றமே இந்தத் தடைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, ஆகஸ்ட் 2024-ல் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அந்த நேரத்தில், நாட்டில் இந்துக்கள் உட்பட சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நடந்தன. இந்தியா இதை கடுமையாகக் கண்டித்தது.