சென்னை: சில சந்திப்புகள் காலத்தால் அழியாதவை என்று நடிகர் ரஜினியை சந்தித்து விட்டு நடிகை சிம்ரன் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
உலகம் முழுவதும் கூலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் வெளியாகி 4 நாட்களில் உலகளவில் மொத்தம் ரூ.404 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது.
இந்நிலையில் நடிகை சிம்ரன் , ரஜினிகாந்தை நேரில் சந்தித்துள்ளார் அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அவர் பதிவிட்ட பதிவில் ” சில சந்திப்புகள் காலம் கடந்தது. சூப்பர் ஸ்டாரை சந்தித்தது மிகப் பெரிய சந்தோஷம். கூலி மற்றும் டூரிஸ் ஃபேமிலி படங்களின் வெற்றி அதை இன்னும் ஸ்பெஷாலாக்கியது” என பதிவிட்டுள்ளார்.