பிரபல மலையாள நடிகர் ஃபஹத் பாசில் தமிழில் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன், கமலின் விக்ரம், ரஜினிகாந்தின் வேட்டையன், மாமன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து நடித்து வருகிறார். மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துள்ள அவர் விரைவில் இந்தியிலும் அறிமுகமாகவுள்ளதாக செய்திகள் வெளியாகின.
அவர் நடிக்கும் படத்தை இம்தியாஸ் அலி இயக்குவார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் இம்தியாஸ் அலி அதை உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “ஃபஹத் பாசில் நடிக்கும் அடுத்த படத்தை நான் இயக்குவது உண்மைதான். படத்துக்கு ‘தி இடியட் ஆஃப் இஸ்தான்புல்’ என்று தலைப்பு வைத்துள்ளேன். ஃபஹத் பாசிலுக்கு ஜோடியாக திரிப்தி டிமிரி கதாநாயகியாக நடிக்கிறார். அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.