தென்னிந்திய சினிமாவின் தனித்துவமான நடிகர் ஃபஹத் ஃபாசில் தற்போது ஒரு வித்தியாசமான காரணத்துக்காக இணையத்தில் வைரலாகியுள்ளார். காரணம் – அவர் பயன்படுத்தும் செல்போன். பார்ப்பதற்கு சுமாரான பழைய மாடல் போனாக இருந்தாலும், அது சாதாரண நோக்கியா அல்ல, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள Vertu Ascent எனும் சொகுசு பிராண்ட் போன் என்பது தான் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்த போன் 2008இல் வெளியான ரேர் ரெட்ரோ மாடல். உலகம் 5ஜி போகும் நிலையில், ஃபஹத் இன்னும் 2ஜி Vertu போன் வைத்திருப்பது தான் இவரது தனித்துவத்தை வெளிப்படுத்துகிறது.

முன்னதாக நடிகர் வினய் ஃபோர்டும், ஃபஹத் சாதாரண கீபேட் போனை மட்டுமே பயன்படுத்துவதாக கூறியிருந்தார். ஆனால் உண்மையில் அது சொகுசு ஸ்மார்ட் போனை விட விலையுயர்ந்தது என்பது தற்போதுதான் வெளியே வந்துள்ளது.
அதிக பணம் இருந்தும் டச்ஸ்கிரீன் போன்கள், சோஷியல் மீடியா எல்லாவற்றையும் தவிர்த்து வாழும் ஃபஹத்தை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். அவர் எந்த ஒரு சமூக வலைதளத்திலும் இல்லை, ஆனால் அவரது தன்மை, எளிமை மற்றும் தேர்ந்தெடுத்த வாழ்க்கை முறை இணையத்தில் பேச்சு பொருளாகியுள்ளது.
அவரது மனைவி நஸ்ரியா, முன்னதாகச் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்தாலும், சமீபத்தில் அவர் கூட அதன் பக்கம் வராமல் இருக்கிறார். இது ஒரு ‘low-key power couple’ என்றே சொல்லலாம்.
சினிமா பக்கம்
ஃபஹத்தின் அடுத்த படம் மாரீசன், வடிவேலுவுடன் இணைந்து வரும் ஜூலை 25ம் தேதி வெளியாக இருக்கிறது. இவர் நடித்த வேட்டையன் மற்றும் மாமன்னன் ஆகிய படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் நெருக்கம் பெற்றுள்ளார்.
தனித்துவமான நடிகரான ஃபஹத்தின் வாழ்க்கை முறை, அவரது தேர்வுகள் – அனைத்தும் ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் அமைந்துள்ளன. அவர்கள் நினைத்தது போல நோக்கியா இல்ல, ஆனால் அவர் வைத்திருப்பது ‘simple look – luxury value’ என்பதையே நிரூபிக்கிறது.