சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து படம் தயாரிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சூர்யா இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.
ஒளிப்பதிவாளராக ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, படத்தொகுப்பாளராக ஷபிக் முகமது அலி, ஸ்டண்ட் இயக்கத்தில் கேச்சா கம்பக்டே, ஆடை வடிவமைப்பாளராக பிரவீன் ராஜா, வில்லனாக உறியடி விஜயகுமார் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த மாத தொடக்கத்தில் அந்தமானில் படப்பிடிப்பு தொடங்கியது. இடைவேளையின்றி தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதன் காரணமாக இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் செப்டம்பர் மாதத்திலேயே முடிவடையும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் அங்கு விறுவிறுப்பாக நடந்து வரும் படப்பிடிப்பில் பிரபல நடிகர்கள் ஜோஜு ஜார்ஜ், தனகரன் இயக்குனர் தமிழிசை, நாராயணன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். ஜிகர்தண்டா 2 வில்லன் நவீன் சந்திராவும் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.