ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், கடந்த திங்கட்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இதில், ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. அதன் பிறகு, ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே ரசிகர்களிடையே சமூக ஊடகங்களில் வாய்மொழி மோதல் வெடித்தது.

இதன் போது, சில சிஎஸ்கே ரசிகர்கள் விராட் கோலியை கிண்டல் செய்து, அவரைப் பற்றி பல்வேறு விதமாக பதிவுகளை வெளியிடத் தொடங்கினர். இந்த சம்பவத்திற்கு நடிகை வர்ஷா தனது கண்டனத்தைத் தெரிவித்து, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் தனது பதிவில், “அவரைப் புகழ்ந்து பேச நாம் மற்றொரு வீரரை அவமதிக்கக்கூடாது. நம் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களை அவமதிக்கக்கூடாது. அவர்கள் மென் இன் ப்ளூ என்பதை மறந்துவிடக் கூடாது” என்று எழுதினார். இந்தப் பதிவு ஆர்சிபி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.