சென்னை: டிராகன் படத்தின் டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் மிஷ்கின் தான் சினிமாவில் இருந்து விரைவில் விலகத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இவரது இந்தப் பேச்சு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் மிஷ்கின். தன்னுடைய முதல் படத்தில் ஏற்படுத்திய தாக்கம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிஷ்கினுக்கு பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இதனால் அவருடைய அடுத்த படமான அஞ்சாதே படத்திலும் தாக்கத்தை ஏற்படுத்த தயங்கவில்லை.
அடுத்தடுத்து யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன் மற்றும் சைக்கோ படங்களும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் ஜொலித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்துள்ள படம் டிராகன். இந்த படத்தில் மிஷ்கின் வில்லனாக நடித்துள்ளார்.
அஸ்வத் மாரிமுத்து இயக்கிய இந்தப் படத்தின் டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது . இதில் மிஷ்கின் கலந்து கொண்டார். அப்பொழுது பேசிய அவர், “நான் பாட்டல் ராதா நிகழ்ச்சிக்கு பிறகு சுமார் ஒரு ஆண்டிற்கு எந்த மேடையிலும் கலந்து கொள்ளக் கூடாது என்று இருந்தேன். ஆனாலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மூன்று பேர் தான் காரணம்.
அகோரம் சார், அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன் ஆகிய மூன்று பேர்கள் தான். இவர்களால் தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். இதனையடுத்து விரைவில் சினிமாவை விட்டு வெளியே போக போகிறார் இயக்குனர் மிஷ்கின் என்று அவரையே கூறிக்கொண்டார். இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளார்கள். மிஸ்கின் இப்படி முடிவெடுக்க பாட்டல் ராதா இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசியதற்கு வந்த எதிர்ப்புகள் தான் காரணமாக இருக்குமோ? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.