நடிகை நயன்தாரா தற்போது சிரஞ்சீவியின் “மெகா 157” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்கும் அனில் ரவிபுடி, நயன்தாராவை ஹீரோயினாக தேர்ந்தெடுத்து நடித்த வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். ஆரம்பத்தில் அவர் ரூ.18 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் வந்தது. ஆனால், இறுதியில் ரூ.6 கோடி சம்பளத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தெலுங்கு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வழக்கமாக ஒரு படத்திற்கு ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்கும் நயன்தாரா, ஏன் இந்த அளவுக்கு சம்பளத்தை குறைத்தார் என்பது ரசிகர்களிடையே சிக்கலான கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும், விளம்பர படங்களுக்கு ரூ.5 கோடி சம்பளம் வாங்கும் நிலையில், ஒரு முழு நீள திரைப்படத்திற்கு ரூ.6 கோடி என்பது நியாயமா என்று பலரும் வினாவுகிறார்கள்.

இது தொடர்பாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். “நம் தலைவி மார்க்கெட்டில் டாப் போஸிஷனில் இருக்கிறார், இது தேவையில்லாத வேலை” என கருத்து தெரிவிக்கிறார்கள். மற்றொரு பக்கம், த்ரிஷா தற்போது ரூ.12 கோடி சம்பளத்தில் “தக் லைஃப்” படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், நயன்தாரா முன்பு இருந்த டாப் ஸ்பாட் தற்போது த்ரிஷாவுக்கு சென்றுவிட்டது. ஆனால் நயன்தாரா இரட்டைக் குழந்தைகளுக்குப் பிறகு குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்பி, சில வாய்ப்புகளை தவிர்த்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
“மெகா 157” படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு உத்தரகண்ட் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. நயன்தாரா மற்றும் சிரஞ்சீவியின் முக்கிய காட்சிகள், பாடல்கள் படமாக்கப்பட்டுள்ளன. இதில் கேத்ரீனா தெரசாவும் நடிக்கிறார். ஹீரோக்கள் வயதாகியும் சம்பள உயர்வுடன் தொடர்கின்ற நிலையில், ஹீரோயின்கள் வயதால் பின்னடைவு அடைகிறார்களா என்பது சமூக வலைதளங்களில் விவாதமாகி வருகிறது.