விஜய் கடைசியாக நடித்து வரும் படம் ‘விஜய் 69’. இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. சுமார் 15 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே நிறைவடைந்துள்ளது. அதற்குள் பார்ஸ் ஃபிலிம்ஸ் இதுவரை இல்லாத விலைக்கு வெளிநாட்டு உரிமையை வாங்கியது.
தற்போது ‘விஜய் 69’ படத்தின் தமிழக விநியோக உரிமைக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. இதன் விலை சுமார் ரூ.100 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு முன்னணி விநியோகஸ்தர்கள் போட்டியிட்டாலும், உரிமை லலித் குமாருக்குச் செல்வதாகக் கூறப்படுகிறது.
இவர் ‘மாஸ்டர்’, ‘லியோ’ ஆகிய படங்களைத் தயாரித்தவர். மேலும், இவர் விஜய்க்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.