அருள்நிதி நடித்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை இயக்கிய மு.மாறன், அடுத்து உதயநிதி நடித்த ‘கண்ணை நம்பாதே’ படத்தை இயக்கினார். இவர் ‘பிளாக்மெயில்’ படத்தை இயக்கி வருகிறார். இதில், ஜி.வி. பிரகாஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தேஜு அஸ்வினி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

பிந்து மாதவி, ஸ்ரீகாந்த் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சாம் சிஎஸ் இசையமைக்கும் இப்படத்தை ஜேடிஎஸ் பிலிம் பேக்டரி சார்பில் தெய்வகனி மற்றும் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிக்கின்றனர்.
இந்த க்ரைம் த்ரில்லர் கதையின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.மே மாதம் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம் என படக்குழு தெரிவித்துள்ளது.