மும்பை: இலசமாக தங்கிக் கொள்ளுங்கள்… துபாயில் சிக்கியுள்ளவர்களுக்கு தற்காலிக இலவச தங்குமிடம் வழங்குவதாக பிரபல பாலிவுட் நடிகர் சோனுசூட் அறிவித்துள்ளார்.
இஸ்ரேல்- அமெரிக்கா கூட்டு படைகளின் தாக்குதலுக்கு எதிர் தாக்குதலாக வளைகுடா நாடுகளை குறி வைத்து தாக்கி வருகிறது ஈரான். குவைத், கத்தார், துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் உள்ள அமெரிக்கா தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் விமான போக்குவரத்தும் தடைபட்டுள்ளது.
இந்த தளங்களின் அருகே குடியிருப்பவர்களை தற்காலிக இடங்களில் நகர்த்தவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் ஒரு பதிவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் துபாயில் மாறியுள்ள எந்த நாட்டின் குடிமக்களும் தற்காலிக தங்குமிடத்திற்கு தன்னை அணுகுமாறும், அவர்கள் பத்திரமாக நாடு திரும்பும் வரை இலவசமாக அங்கே தாங்கிக்கொள்ளலாம் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.