கண்ணா ரவி மண்டேலா, குருதியாட்டம், ரத்தசாட்சி, கூலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அவர் நடிக்கும் வலைத் தொடர் ‘வேடுவன்’.
உணர்ச்சிபூர்வமான கதைசொல்லல் மற்றும் ஆழமான நடிப்பை இணைக்கும் நாடகமாக உருவாக்கப்பட்ட இந்த வலைத் தொடர், அக்டோபர் 10 முதல் Zee5-ல் வெளியிடப்படும்.

இது குறித்து கண்ணா ரவி கூறுகையில், “இது ஒரு மனிதனின் பயணம் பற்றிய கதை மட்டுமல்ல, அவன் எடுக்கும் முடிவுகள், அவற்றின் விளைவுகள் மற்றும் சரிக்கும் தவறுக்கும் இடையிலான மெல்லிய கோட்டை ஆராயும் ஒரு பயணமாகும்.
ஒரு நடிகராக, இந்தக் கதாபாத்திரம் என்னை முழுமையாக வாழ வைத்தது என்றார்.”