வேரூஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க கௌதம் ராம் கார்த்திக் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்தை சூரிய பிரதாப் இயக்குவார். ஆரம்பகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இயக்குனர் சூரிய பிரதாப் ‘நாளைய டைரக்டர் சீசன் 1’ மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சூரிய பிரதாப் சௌந்தர்யா ரஜினிகாந்தின் ‘கோச்சடையான்’ படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றினார். படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இந்தப் படம் ஒரு அறிவியல் புனைகதை குற்றத் திரில்லராக இருக்கும். இதில் கவுதம் ராம் கார்த்திக் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார்.

படப்பிடிப்பு விரைவில் தொடங்கும். பெரும்பாலான காட்சிகளை சென்னையில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. கௌதம் ராம் கார்த்திக்குடன் நடிக்க நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. படத்தில் வில்லனாக நடிக்க முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.
இந்தப் படத்திற்கு முன்பு ‘பேச்சி’ படத்தின் இணை தயாரிப்பாளராக வேரூஸ் புரொடக்ஷன்ஸ் இருந்தது குறிப்பிடத்தக்கது.