விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி ஜூனியர் மற்றும் சீனியர் என இரண்டு பகுதிகளாக ஒளிபரப்பாகிறது. தற்போது, ஜூனியர் சீசன் 10-ன் ‘கிராண்ட் ஃபினாலே’ ஞாயிற்றுக்கிழமை நேரு விளையாட்டு வளாகத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், காயத்ரி பட்டத்தை வென்றவராக அறிவிக்கப்பட்டார்.

அவருக்கு ரூ.60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. நஸ்ரீன் 2-வது பரிசை வென்றார். அவருக்கு ரூ.10 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. சாரா ஸ்ருதி மற்றும் ஆத்யா 3வது இடத்தைப் பிடித்தனர். அவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. நடிகர் கமல்ஹாசனும் ஏ.ஆர். ரஹ்மானும் இணைந்து அவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
‘தக் லைஃப்’ திரைப்படம் அடுத்த மாதம் 5-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தை விளம்பரப்படுத்த இருவரும் சிறப்பு விருந்தினர்களாக நிகழ்வில் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.