‘குட் பேட் அக்லி’ ஏப்ரல் 10-ம் தேதி வெளியானது. அஜித் ரசிகர்கள் மத்தியிலும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெறத் தொடங்கியுள்ளது. இதனால் படத்தின் வசூல் குறையவில்லை. இந்நிலையில், ‘குட் பேட் அக்லி’ 2 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.100 கோடியை கடந்துள்ளது. அஜித்தின் திரையுலக வாழ்க்கையில் 2 நாட்களில் 100 கோடியை தொட்ட முதல் படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது.

திங்கட்கிழமையும் தமிழகத்தில் விடுமுறை என்பதால் அன்றைய தினம் வரை வசூல் குறைய வாய்ப்பில்லை என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள். 5 நாட்களில் தமிழக வசூல் ரூ.100 கோடியைத் தாண்டும் என்கிறார்கள். இதன் மூலம், அஜித்தின் திரையுலக வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை படைக்க வாய்ப்புள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரியா பிரகாஷ் வாரியர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் வெளியிடுகிறது.