சென்னை: குட் பேட் அக்லி திரைப்படத்தில் யோகி பாபு இணைந்துள்ளார். அப்போது அஜித்துடன் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ‘மார்க் ஆண்டணி’ மிகப்பெரிய ஹிட் அடித்தது. அப்படத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
இதை தொடர்ந்து அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சுனில் , நஸ்லேன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
படத்தில் நடிகர் பிரசன்னா மற்றும் அர்ஜூன் தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பின் போது எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது படக்குழு வெளியிட்டு வருகின்றனர்.
நடிகர் அஜித்தும் அவ்வப்போது செல்ஃபிகளையும், கார் ஓட்டுவது போல், வாங்குவது போல், ரேசிங் செய்வது போன்ற வீடியோகள் மற்றும் புகைப்படங்களை பதிவிட்ட வண்ணம் உள்ளார்.
இந்நிலையில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் யோகி பாபு இணைந்துள்ளார். அப்போது அஜித்துடன் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.