சென்னை: பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ்குமாரும் பாடகி சைந்தவியும் காதலித்து வந்தனர். 10 வருடங்களாக காதலித்த இவர்கள், 2013-ல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், 2024-ல் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இந்நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் பிரிந்து செல்வதாக கூறி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்தனர்.

அவர்கள் சார்பில் வக்கீல் நர்மதா சம்பத் ஆஜராகி மனு தாக்கல் செய்தார். இந்த மனு சென்னை முதலாவது கூடுதல் குடும்பநல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இருவரும் ஜி.வி. பிரகாஷும் சைந்தவியும் நேரில் ஆஜராகி தாங்கள் முன்வந்து பிரிவதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, வழக்கின் விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார். ஜி.வி. பிரகாஷ் – சைந்தவிக்கு அன்வி என்ற மகள் உள்ளார். முன்னதாக, ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி ஒரே காரில் கோர்ட்டுக்கு வந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்து விட்டு சென்றனர்.