சென்னை: ஜி.வி. பிரகாஷ் – கயாடு லோஹர் நடிக்கும் ‘இம்மார்டல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘கிங்ஸ்டன்’ படத்திற்குப் பிறகு, ஜி.வி. பிரகாஷ் தனது அடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது, அவர் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் மாரியப்பன் சின்னா இயக்குகிறார். இந்தப் படத்தின் இரண்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ‘இம்மார்டல்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஏ.கே. பிலிம் ஃபேக்டரி தயாரித்து அருண்குமார் தனசேகரன் தயாரிக்கிறார்.
ஜி.வி. பிரகாஷ் மற்றும் கயாடு லோஹர் இணைந்து நடிக்கும் இந்தப் படத்தில் அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார், சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து, படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.