முன்னணி நடிகை ஹன்சிகா மோத்வானியை சுற்றி கடந்த சில வாரங்களாகவே விவாகரத்து தொடர்பான செய்திகளும் வதந்திகளும் பரவியிருந்தன. சமூக வலைதளங்களில் ஹன்சிகா தனது கணவர் சோஹல் கதூரியாவுடன் பிரிந்து விட்டதாக பலரும் பேசிய வந்தனர். ஆனால் இப்போது, ஹன்சிகாவின் கணவரே நேரடியாக பதிலளித்து, இந்த விவாகரத்து செய்தி பொய்யானது என மறுத்துள்ளார்.
தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வரும் ஹன்சிகா, தனது தோழியின் முன்னாள் கணவரான சோஹலை 2022-இல் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு, அவர்கள் மும்பையில் வாழ்ந்து வந்தனர். ஆனால், சமீபத்தில் சோஹலின் தங்கை, ஹன்சிகா மற்றும் அவரது தாயார் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தது, மற்றும் வழக்குகள் தொடரப்பட்டதுதான் விவாகரத்து வதந்திக்கே தளமாக அமைந்தது.
இந்நிலையில், ஹன்சிகா தனது தாயார் வீட்டில் தனியாக இருப்பது, கணவருடன் மோதல் ஏற்பட்டிருப்பது போன்ற தகவல்கள் பரவியது. இவை அனைத்தும் சமூகவலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர, ஹன்சிகாவின் கணவர் சோஹல் கதூரியா, தங்களுக்குள் விவாகரத்து நடைபெறவில்லை என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் உறுதியுடன் விளக்கம் அளித்துள்ளார்.
அதன் மூலம், ஹன்சிகா விவாகரத்து விவகாரம் குறித்த சமூக வலைதளங்கள் மற்றும் மீடியாவில் பரவிய கருத்துகள் தற்போது தற்காலிகமாக ஓரமடைக்கப்பட்டுள்ளன. அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் எதுவும் முடிவெடுக்கப்படவில்லை என்பதை இதன்மூலம் தெளிவுபடுத்தியிருக்கின்றனர்.