‘லப்பர் பந்து’ படத்துக்குப் பிறகு ஹரிஷ் கல்யாண் நடிக்கும் படத்தை ‘லிஃப்ட்’ இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்குகிறார். கதாநாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடிக்கிறார். ஐடா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ளார். இது வடசென்னை பின்னணியில் உருவாகும் ஆக்ஷன் த்ரில்லர் படமாகும். இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில் இதன் படப்பிடிப்பு நிறைவடையும். இதில் ஹரிஷ் கல்யாணின் கேரக்டர் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹரிஷ் கல்யாண் ரத்த வெள்ளத்துடன் நிற்பது போன்ற போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.