விஜய் நடித்த ‘கத்தி’ படத்தில் வில்லனாக நடித்த ஹிந்தி நடிகர் நீல் நிதின் முகேஷ், தான் இந்தியன் என்று நம்பாததால் அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் படப்பிடிப்புக்காக நியூயார்க் சென்றிருந்தேன்.
அப்போது விமான நிலையத்தில் என்னை தடுத்து நிறுத்தினர். நான் இந்தியன் என்றும் எனது இந்திய பாஸ்போர்ட் என்றும் அவர்கள் நம்பவில்லை. பதில் சொல்ல விடாமல் என்னிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். சுமார் 4 மணி நேரம் என்னை விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அதன் பிறகு, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? என்றனர்.
என் பெயரை கூகுள் செய்து பாருங்கள் என்றேன். பிறகு, தங்கள் தவறை உணர்ந்து, அவர்கள் என் அப்பா மற்றும் தாத்தாவைப் பற்றி கேட்கத் தொடங்கினர், பின்னர் என்னை விடுங்கள்,” என்று அவர் கூறினார். இவரின் தாத்தா முகேஷ், இந்தியில் பிரபல பின்னணி பாடகர். இவரது தந்தை நிதின் முகேஷும் பாடகர் என்பது குறிப்பிடத்தக்கது.