
இயக்குனரும், நடிகருமான சசிகுமார், நடிகை சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘டூரிஸ்ட் குடும்பம்’ படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. சுமார் 03.52 நிமிட ரன் டைம் கொண்ட இந்த டீசரில், கணவன் மனைவியாக நடிக்கும் சசிகுமாரும், சிம்ரனும் தங்கள் இரு மகன்கள் மற்றும் குடும்பத்துடன் வீட்டை விட்டு ஓடப் போகிறார்கள்.
இதற்கான காரணம் கூறப்படவில்லை. இந்தப் படத்தின் வசனங்கள் இலங்கைத் தமிழ் பேச்சு வழக்கில் எழுதப்பட்டுள்ளன. இந்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கிறது. சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை அபிஷன்ஜீவிந்த் எழுதி இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். படத்தை அடுத்த ஆண்டு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.