சென்னை: சின்ன வயதில் இருந்தே நான் ரொம்ப தமிழ் சினிமா பார்ப்பேன். நண்பர்களுடன் பேசி, பேசி தமிழ் கற்றுக் கொண்டேன் என்று நடிகரும், இயக்குனருமான ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
‘காந்தாரா’ படத்தின் மூலம் சர்வதேச அளவில் பிரபலமானவர் ரிஷப் ஷெட்டி. சமீபத்தில் அவர் இயக்கி நடித்த ‘காந்தாரா சாப்டர் 1’ படம் உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் ரூ.600 கோடியை தாண்டி வசூலை குவித்து வருகிறது.
கன்னட நடிகரான ரிஷப்ஷெட்டி சென்னையில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்ட அவரிடம் தமிழ் ரொம்ப நல்லா பேசுகிறீர்களே எப்படி? என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த ரிஷப் ஷெட்டி, ‘சின்ன வயதில் இருந்தே நான் ரொம்ப தமிழ் சினிமா பார்ப்பேன்.
என்னுடைய முதல் படம் ‘குப்பி’. தமிழில் தான் வந்தது. அதற்காக ஒரு மாதம் தமிழ் கற்றுக் கொண்டேன். தொடர்ந்து நண்பர்களுடன் பேசி பேசி தமிழ் கற்றுக் கொண்டேன். இப்போ இவ்வளவு நன்றாக தமிழில் பேசுகிறேன். தமிழில் பேசுவதற்கு ரொம்ப ஆர்வமாக இருந்தது என்றார்.