சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மதராஸி’ படம், ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய ‘அமரன்’ படத்தின் வெற்றிக்கு பின் வெளியாகியுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரிலீசான இப்படம், திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. பாக்ஸ் ஆபீஸில் ரூ. 100 கோடி வசூலைக் குவித்த இப்படம், தற்போது ஓடிடி தளமான அமேசான் ப்ரைம்-இல் வெளியாகியுள்ளது.

மதராஸி தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் அக்டோபர் 1 ஆம் தேதி நள்ளிரவில் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. திரையரங்குகளில் கலவையான விமர்சனங்கள் வந்த நிலையில், ஓடிடியில் இப்படத்தின் ரெஸ்பான்ஸ் எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயனின் நடிப்பு, வித்யூத் ஜாம்வாலின் ஆக்ஷன் காட்சிகள் பெரும் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கதையில் வில்லன் கும்பல் தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரத்தை கொண்டு வர திட்டமிடுகிறது. இதனை தடுக்கும் முயற்சியில் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது காதலி ருக்மணி வசந்த் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் மையமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. எஸ்கே தனது ஆக்ஷன் அவதாரம் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். அனிருத் ரவிச்சந்திரின் இசை படத்தை ஆதரித்துள்ளது.
இந்நிலையில், ஓடிடியில் ரிலீஸ் ஆகிய ‘மதராஸி’ திரைப்படம் ரசிகர்களிடையே விரைவில் பெரும் வரவேற்பை பெறுமா என்பதை வரும் நாட்களில் தெரிந்து கொள்ள முடியும். இப்படம் ஏ.ஆர். முருகதாஸ்-ன் முந்தைய படங்களுடன் ஒப்பிடுகையில் சிறிய வெற்றியை குவித்துள்ளதாக கூறப்படுகிறது.