சென்னை :நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இளைஞர்களின் காதல், உறவுமுறை, திருமணம் பற்றிய கதைக்களத்தில் உருவாகிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தை இயக்கிய தனுஷ் தனது X தளத்தில், “காதல், சிரிப்பு, நட்பை கொண்டாட வாருங்கள்… இன்று முதல்… ஓம் நமச்சிவாய.. ” என்று பதிவிட்டுள்ளார்.
சரி படம் எப்படி இருக்கு? தெரியுமா?காதலுக்கும், காதல் தோல்விக்கும் நடுவில் மாட்டிக்கொள்ளும் இளைஞரை பற்றிய கதை இது. தனுஷின் அக்கா மகனும் கதாநாயகனுமான பவிஷ், வராத ரொமான்ஸை வா.. வா.. என வரவழைத்துள்ளார்.
அனிகாவின் நடிப்பு சுமார். மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் படத்தில் ஸ்கோர் செய்துள்ளனர். ஜி. வி. பிரகாஷின் இசை படத்துக்கு முதுகெலும்பாக அமைந்துள்ளது.