ஐதராபாத்: நாக சைதன்யாவுக்கு சோபிதா மீது காதல் வருவதற்கு முன்பே எனக்கு அவரை நன்றாக தெரியும் என்று நடிகர் நாகார்ஜூனா தெரிவித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகன்.
நடிகை சமந்தா உடனான விவாகரத்துக்கு பின், நாக சைதன்யா நடிகை சோபிதாவுடன் காதலில் இருந்து, பின் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் திருமணம் ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் நடைபெற்றது.
இந்நிலையில், மருமகள் சோபிதா குறித்து நாகர்ஜூனா கூறிய விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ” நாக சைதன்யாவுக்கு சோபிதா மீது காதல் வருவதற்கு முன்பே எனக்கு அவரை நன்றாக தெரியும். சோபிதா அவருடைய கடினமான உழைப்பாலும், திறமையாலும் தான் இந்த இடத்தை அடைந்துள்ளார். சோபிதா அவருடைய வேலையில் எப்போதும் தரத்துக்கு முன்னுரிமை கொடுப்பார்.
அவரை போன்று மிகவும் அமைதியான ஒரு மருமகள் கிடைத்ததற்கு நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்” என்று கூறியுள்ளார்.