மும்பை: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஸ்ரேயா கோஷல், பல்வேறு வகைகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். அவர் இசை நிகழ்ச்சிகளையும் நடத்துகிறார். பல வாய்ப்புகள் வந்தாலும் படங்களில் நடிக்க மறுத்துவிட்டார். அவரது X தளத்தை 69 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். சமீபத்தில், 10 சதவீதம் எண்ணெய் குறைப்போம் என்று கூறி, உடல் பருமன் பிரச்னைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்துக்கு, 10 பேரை பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்தார்.
அவர்களில் ஸ்ரேயா கோஷலும் ஒருவர். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஸ்ரேயா கோஷல் வெளியிட்டுள்ள பதிவில், ‘கடந்த 13-ம் தேதி முதல் மை எக்ஸ் இயங்குதளம் முடக்கப்பட்டுள்ளது. இதை சரிசெய்ய X இயங்குதள குழுவை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் தானியங்கு பதில்களைத் தவிர எனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. என்னால் எனது கணக்கை நீக்கவும் முடியவில்லை, உள்நுழையவும் முடியவில்லை.
எனவே, எனது ‘எக்ஸ்’ பக்கத்தில் வரும் எந்த லிங்கையும் கிளிக் செய்யாதீர்கள், எந்த செய்தியையும் நம்பாதீர்கள், எல்லாமே போலியான மற்றும் மோசடியான செய்திகளாக இருக்கும். எனது தளத்தை மீட்டெடுத்த பிறகு உங்களுக்குத் தெரிவிக்கிறேன்,” என்று வேதனையுடன் கூறினார். கடந்த 6ம் தேதி முதல் அவரது X தளத்தில் இருந்து எந்த பதிவும் வெளியிடப்படவில்லை.