சென்னை: ‘ரோஜாகூட்டம்’, ‘பத்ரி’, ‘சில்லுனு ஒரு காதல்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பூமிகா. ‘டோனி’ என்ற ஹிந்திப் படத்தில் நடித்து பாலிவுட்டில் பிரபலமானார். இப்போது தமிழ், தெலுங்கில் கதாநாயகியாகவும், தங்கையாகவும் மாறி மாறி நடித்து வருகிறார். கடைசியாக தமிழில் ‘பிரதர்’ படத்தில் ஜெயம் ரவியின் அக்காவாக நடித்தார்.
நான் முதலில் நடிக்க வந்தபோது, என் உதடுகளால் ஆடிஷனில் என்னை நிராகரித்தார்கள். இதனால் ஆரம்பத்தில் பல பட வாய்ப்புகளை இழந்தேன். நான் பெரிய உதடுகளைக் கொண்டிருப்பதாக விமர்சிக்கப்பட்டேன். சின்ன வயசுல இருந்தே நான் உருவ கேலியும் செய்ய பட்டுள்ளேன். ஆனால் நான் அதைப் பற்றி அதிகம் கவலைப்பட்டதில்லை.
பின்னர், நடிப்புத் திறமையால் எனக்கு வாய்ப்புகள் கிடைத்தன. மைனஸாக கருதப்பட்ட உதடுகள் என் தோற்றத்திற்கு அழகு ஆனது. தொடர்ந்து பல படங்களில் நடித்தேன். மனம் தளராமல் இருந்தால் இதுபோல் சாதிக்கலாம் என்பதற்கு நானே உதாரணம் என்கிறார் பூமிகா.