தனுஷ் இயக்கி, நடித்துள்ள இட்லி கடை படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்துள்ளது. கிராமத்து கதைமாந்தர்களை மையமாகக் கொண்ட இந்தப் படம், குடும்ப பிணைப்புகள், உணவு கலாசாரம், காதல், சண்டை என அனைத்தையும் கலந்துக் கொண்டிருப்பது சிறப்பு.

கதையில், ராஜ்கிரண் ஒரு சிறிய கிராமத்தில் இட்லிக்கடை நடத்துகிறார். அவரின் கைப்பக்குவம் காரணமாக அந்தக் கடை ஊரே அடிமையாகி விடுகிறது. மகனாக வரும் தனுஷும் சமையலில் திறமையுடன் இருப்பதால், கடையை விரிவுபடுத்த வேண்டும் என கனவு காண்கிறார். ஆனால், சூழ்நிலைகள் அவரை வெளிநாட்டுக்கு இழுத்துச் செல்ல, அங்கு பெரிய ஹோட்டலில் சீப்பாக பணியாற்றுகிறார். இதே வேளையில், சத்யராஜின் மகளான ஷாலினி பாண்டேவுடன் காதல் மலர, அருண்விஜய் தடையாக நிற்பார். இதன் நடுவே சொந்த ஊரில் நடக்கும் சிக்கல்களையும், காதலையும், குடும்பக் களேபரத்தையும் எப்படி சமாளிக்கிறார் என்பதே படத்தின் மையக்கரு.
செய்யாறு பாலுவின் விமர்சனப்படி, படத்தின் முதல் பாதி கவர்ச்சியாக உள்ளது. காதல், காமெடி, உணர்ச்சிகள் அனைத்தும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. தனுஷின் நடிப்பு பெரும் பலமாக அமைந்துள்ளது. அவருடன் நித்யா மேனன், ராஜ்கிரண், அருண்விஜய், பார்த்திபன், சமுத்திரக்கனி ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளனர்.
ஆனால், படத்தின் இரண்டாம் பாதி மெதுவாகச் செல்லும் என்பதே மைனஸ். லாஜிக்கில் சில குறைகள் இருந்தாலும், அவற்றை சீர்செய்திருந்தால், படம் முழுமையாக குடும்பங்களால் கொண்டாடப்பட்டிருக்கும் என விமர்சகர் குறிப்பிட்டுள்ளார். மொத்தத்தில், இட்லி கடை ஒரு நல்ல குடும்ப படமாக இருந்தாலும், இன்னும் சுவை கூட்டியிருக்கலாம் என்பதே கருத்து.