சென்னை : நான் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் நடிகர் கமல்ஹாசனை திருமணம் செய்திருப்பேன் என்று பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
சிறுவயதில் கமல்ஹாசனை கட்டிப் பிடித்துவிட்டு 3 நாள்கள் குளிக்காமல் இருந்ததாக நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
கமலின் ஆரா மற்றும் ஸ்மெல் தன் மீது இருக்க வேண்டும் என நினைத்து அப்படி செய்ததாகவும், அந்த அளவிற்கு அவருடைய ரசிகன் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஒருவேளை தான் பெண்ணாக பிறந்திருந்தால் அவரைத் தான் நிச்சயமாக திருமணம் செய்திருப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
கன்னடத்தில் பிரபல நடிகர் ஆன சிவராஜ் குமார் ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.