‘குபேரா’ திரைப்படம் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ஃப், தலிப் தாஹில் மற்றும் பலர் நடித்துள்ளது. சேகர் கம்முலா இயக்கியுள்ள இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் ஜூன் 20-ம் தேதி வெளியாகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
பாடல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெற்றது. நடிகர் தனுஷ் பேசுகையில், “இது கலிகாலத்தின் சகாப்தம். வெறுப்பு, எதிர்மறை மற்றும் பொறாமை செழித்து வளரும் காலம்; தீமை நன்மையை விட மேலோங்கி நிற்கிறது. நீங்கள் எனக்கு எதிராக எத்தனை வதந்திகளை வேண்டுமானாலும் பரப்பலாம். நீங்கள் எதிர்மறையான விஷயங்களைத் தூண்டலாம். எனது படம் வெளியாவதற்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பே அவர்கள் என்னைப் பற்றி ‘எதிர்மறையை’ பரப்புகிறார்கள்.

சகோதரர்களே, கொஞ்சம் தள்ளி போய் விளையாடுங்கள். இங்கு வந்துள்ள அனைவரும் எனது ரசிகர்கள் மட்டுமல்ல. அவர்கள் 23 வருடங்களாக என்னுடன் இருக்கும் என் தோழர்கள். நீங்கள் ஒரு வதந்தியைப் பரப்பி என்னை காலி செய்ய முயற்சித்தால், அதை விட முட்டாள்தனம் எதுவும் இல்லை. ஒரு செங்கல்லைக் கூட அசைக்க முடியாது. வாழ்க்கை என்பது ஒரு யோசனை போன்றது. மகிழ்ச்சியாக இருங்கள்.
வெளியே மகிழ்ச்சியைத் தேடாதீர்கள். அது உங்களுக்குள் இருக்கிறது. நான் ஒரு வேலை உணவு இல்லாமல் கஷ்டப்பட்டிருக்கிறேன். இப்போது நான் நல்ல நிலையில் இருக்கிறேன். எந்த நிலையிலும் நான் மகிழ்ச்சியாக இருப்பேன். ஏனென்றால் நான் வெளியே மகிழ்ச்சியைத் தேடுவதில்லை. இவ்வாறு தனுஷ் பேசினார். படக்குழுவினர் பங்கேற்றனர்.